இறைத்தூதருக்கு எதிராக கருத்து தெரிவித்த எகிப்து நீதி அமைச்சர் நீக்கம்

0
326

இறைத்தூதர் சட்டத்தை மீறினால் கூட அவரையும் சிறையில் அடைப்பேன் என்று பெருமை பேசிய எகிப்து நீதி அமைச்சர் அஹமது அல் சின்த் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சி ஒன்றிலேயே சின்த், கடந்த வெள்ளிக்கிழமை இந்த கருத்தை கூறி இருந்தார். எனினும் அவர் அடுத்த தினமே உடனடியாக, “இறைவன் என்னை மன்னிக்க வேண்டும்” என்று வருத்தத்தை வெளியிட்டார்.

எவ்வாறாயினும் அவரை பிரதமர் ஷரிப் இஸ்மையில் பதவி நீக்கம் செய்துள்ளார்.

எகிப்தின் பலம்மிக்க முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஒருவரான சின்தின் இடத்திற்கு நியமிக்கப்படுபவர் குறித்து உறுதியாகவில்லை.

சின்த் வெளியேற்றப்பட்டதற்கு எகிப்து நீதிபதிகள் எதிர்ப்பு வெளியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது வாய் தவறி வந்த வார்த்தை என்றும் இவ்வாறு யாருக்கும் நிகழலாம் என்றும் நீதிபதிகள் கழகம் குறிப்பிட்டுள்ளது.

(Thinakaran)

LEAVE A REPLY