மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் விபத்து..

0
352

(அபூ மொழினா)

நேற்று (14) மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மஞ்சந்தொடுவாய் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அப்பகுதியால் சென்ற இரு மாணவிகளின் துவிச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகினர்.

இவ்விபத்தின்போது மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் வீதியில் வீசப்பட்ட நிலையில் பலத்த காயங்களுக்குள்ளாகினார்.

இதே வேளை துவிச்சக்கர வண்டியில் வந்த இரு மாணவிகளுக்கும் எவ்வித பாதிப்புமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

MAN 1 MAN 2 MAN 4 MAN.3

LEAVE A REPLY