மின் விநியோக துண்டிப்பு தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 21 இற்கு முன்னர் கையளிக்குமாறு பணிப்புரை

0
148

நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட மின்சார விநியோக துண்டிப்பு தொடர்பில் உள்ளக மற்றும் வெளியிலான குழு அறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதி தமக்கு கையளிக்குமாறு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டமை குறித்து ஆராய்வதற்காக இன்று முற்பகல் பியகம உப மின் ஏற்பு நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பியகம உப மின் ஏற்பு நிலையத்திலுள்ள பாரிய மின்மாற்றியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் செயலிழந்தமையால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

-NF-

LEAVE A REPLY