அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மேற்கிந்திய தீவுகள்

0
343

உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.

கொல்கத்தாவில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் சேர்த்தது.

ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 39 பந்தில் 60 ஓட்டங்கள் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.

அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் 36 ஓட்டங்களும், ஆரோன் பிஞ்ச் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் வெய்ன் பிராவோ 4, சுலிமான் பென் 3, பிராத்வெய்ட் 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், அணித்தலைவர் டேரன் சேமி அரைசதம் எடுத்து நம்பிக்கை அளித்தார்.

இதனால் அந்த அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அணித்தலைவர் டேரன் சேமி 28 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

மேலும், ரஸல் 29 ஓட்டங்களும், பிராத்வெய்ட் 33 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்கள்.

இதில் அவுஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் அது அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.

LEAVE A REPLY