மட்டு வெள்ளைப்பாலம் புனரமைக்கப்படுகிறது

0
273

மட்டக்களப்பு நகரை இணைக்கும் முக்கிய பாலமான வெள்ளைப் பாலத்தை புனரமைக்கும் பணி கடந்த புதன்கிழமை (09) ஆரம்பமாகியுள்ளது.

2012ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்த இப்பாலம் புனரமைக்கப்பட்டபோதிலும், ஆபத்து நிறைந்ததாகவே இருந்து வந்தது.

இந்நிலையிலேயே இப்பாலத்தை மீளவும் புனரமைக்கும் பணியை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. இப்புனரமைப்புப் பணிக்காக உலக வங்கி சுமார் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் ரி.பத்மராஜா தெரிவித்தார்.

கட்டம் கட்டமாக இப்பாலம் புனரமைக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக பாலத்தின் ஒருபகுதி புனரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Batti White Bridge 2 Batti White Bridge 3

LEAVE A REPLY