வடக்கு கிழக்கு இணைவதை இரு மாகாண மக்கள் மாத்திரம் தீர்மானித்துவிட முடியாது: ரவூப் ஹக்கீம்

0
212

எந்தப் பிராந்­தி­ய­மாக இருந்­தாலும் ஒன்­றுடன் ஒன்று இணைய வேண்­டு­மாக இருந்தால் அது பாரா­ளு­மன்ற பிரே­ரணை ஒன்றின் மூல­மா­கவே சாத்­தி­ய­மாகும். எனவே, தனியே வடக்கு, கிழக்கு மக்கள் மாத்­திரம் அதனை தீர்­மா­னிக்க முடி­யாது.

நாட்­டி­லுள்ள ஏனைய கட்­சி­களும் அதில் பங்­கு­பற்ற வேண்டும்.

ஆகவே இருக்­கின்ற சாத்­தி­யப்­பா­டு­களைப் புரிந்து கொள்­ளாது எடுத்த எடுப்­பிலே கருத்­துக்­களை முன் வைக்க முடி­யாது.

வடக்கு, கிழக்கு இணைப்பு  சம்­பந்­த­மாக திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சமும் பீதியும் இருந்து வந்­துள்­ளது என மு.காவின் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

மு.காவின் 19 ஆவது தேசிய மாநாடு குறித்து நேற்று முன் தினம் மாலை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.  அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்ட போது மு.கா. ஒரு தெளி­வான முடிவில் இருந்­தது. அதா­வது வடக்கும், கிழக்கும் நிரந்­த­ர­மாக இணைக்­கப்­ப­டு­மாக இருந்தால் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான அதி­கார அலகு தரப்­பட வேண்­டு­மென்று தெரி­வித்­தது.

வடக்கும், கிழக்கும் பிரிக்­கப்­பட்­டதன் பிற்­பாடு இருக்­கின்ற சட்ட நிய­திகள் குறித்து மிகத் தெளி­வாக நாங்கள் புரிந்து கொள்­ளாது  தடி எடுத்­த­வர்கள் எல்­லோரும் வேட்­டைக்­கா­ரர்­க­ளாகி பல அறிக்­கை­களை விடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

எந்தப் பிராந்­தி­ய­மாக இருந்­தாலும் ஒன்­றுடன் ஒன்று இணைய வேண்­டு­மாக இருந்தால் அது பாரா­ளு­மன்ற பிரே­ரணை ஒன்றின் மூல­மா­கத்தான் சாத்­தி­ய­மாகும்.

எனவே, தனியே வடக்கு, கிழக்கு மக்கள் மாத்­திரம் அதனை தீர்­மா­னிக்க முடி­யாது. நாட்­டி­லுள்ள ஏனைய கட்­சி­களும் அதில் பங்­கு­பற்ற வேண்டும்.

ஆகவே இருக்­கின்ற சாத்­தி­யப்­பா­டு­களைப் புரிந்து கொள்­ளாது எடுத்த எடுப்­பிலே கருத்­துக்­களை முன் வைக்க முடி­யாது.

வடக்கு, கிழக்கு இணைப்பு  சம்­பந்­த­மாக திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சமும் பீதியும் இருந்து வந்­துள்­ளது. ஆதலால், பக்­கு­வ­மாக இதனைக் கையாள வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புடன் நாங்கள் நடத்­திய பேச்­சுக்­களின் போதும் இது பற்றி கதைத்­துள்ளோம். ஏனைய கட்­சி­க­ளு­டனும் கலந்­து­ரை­யாட வேண்டும். தேவை­யில்­லாத பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தக் கூடா­தென்­ப­தற்­காவே மு.கா. சில விட­யங்­களை பகி­ரங்­க­மாக கதைப்­ப­தனை தவிர்த்து வந்­துள்­ளது.

எல்லாப் பிராந்­தி­யங்­க­ளிலும் உள்ள முஸ்­லிம்­க­ளுக்கும் நேர்­மை­யான, நியா­ய­மான தீர்வு கிடைக்க வேண்­டு­மென்­பதில் நாங்கள் மிகத் தெளி­வோடு இருக்­கின்றோம். பல மாற்றுத் தீர்­வு­களைப் பற்றி பேசி­யுள்ளோம்.

மாற்று தீர்­வு­களை முன் வைத்­துள்ளோம். மேலும், இதற்கு பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை தேவை. இவற்றை எல்லாம் கருத்திற் கொள்­ளாது அறிக்­கை­வி­டுக்க முடி­யாது என்றார்.

மு.கா.வின் தேசிய மாநாடு தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் கருத்து வெளி­யி­டு­கையில், எமது தேசிய மாநாட்டில் ஜனா­தி­ப­தியும், பிர­தம மந்­தி­ரியும் கலந்து கொள்­ள­வுள்­ளார்கள்.

அத்­தோடு, வெளி­நா­டு­களின் தூது­வர்கள், எதிர்க் கட்சித் தலை­வரும், தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் உட்­பட ஏனைய கட்சித் தலை­வர்கள் பலரும் கலந்து கொள்­ள­வுள்­ளனர். நாடு பூராவும் உள்ள சுமார் 25ஆயிரம் ஆத­ர­வா­ளர்கள் கலந்து கொள்­வார்கள் என்று எதிர்­பார்க்­கின்றோம்.

கட்சித் தலை­வரின் பேரு­ரையில் நடப்பு வரு­டத்­திற்­கான கட்­சியின் கொள்கை விளக்­கப்­படும். சம­கால அர­சி­யலில் கட்­சியின் நிலைப்­பாடு சம்­பந்­த­மா­கவும் தெரி­விக்­கப்­படும்.

இதன் போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்­வி­க­ளுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதி­ல­ளித்தார்.

கேள்வி: உங்கள் கட்­சியின் தவி­சாளர், செய­லாளர் ஆகி­யோர்­களை மாநாடு விட­யத்தில் புறக்­க­ணித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில் : தேசிய மாநாடு பற்­றிய கலந்­து­ரை­யா­டல்­களை எல்லா உறுப்­பி­னர்­க­ளு­டனும் நடத்தி உள்ளோம்.

இதற்கு ஆத­ரவு தர வேண்­டு­மென்று கேட்டு அதற்­க­மை­வாக குழுக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். அக்­கு­ழுக்­களில் அவர்­களின் பெயர்­களும் இருக்­கின்­றன. ஆதலால், தேசிய மாநாட்டில் எல்லா முக்­கிய உறுப்­பி­னர்­களும் கலந்து கொள்­வார்கள் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது. சில வேளை, வேலைப் பளுக்கள் கார­ண­மாக இருக்­கலாம்.

கேள்வி: சாய்ந்­த­ம­ருது பிர­தேச சபை தொடர்பில் நீங்கள் வழங்­கிய உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­ப­டுமா?

பதில்: சாய்ந்­த­ம­ருது பிர­தேச சபை தொடர்பில் நாம் வழங்­கிய உறு­தி­மொழி நிச்­ச­ய­மாக நிறை­வேற்­றப்­படும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்றோம்.

கேள்வி: தேசிய பட்­டியல் விவ­காரம் விரைவில் தீர்க்­கப்­ப­டுமா? அம்­பாரை மாவட்­டத்தை சேர்ந்த ஒருவர் அதற்கு நிய­மிக்­கப்­ப­டு­வாரா?
பதில்: தேசிய பட்­டியல் விவ­காரம் கட்­சிக்குள் இருக்­கின்ற பல பிராந்­தி­யங்­களில் உள்ள பிரச்­சி­னை­களை அடிப்­ப­டை­யாக வைத்து முடிவு எடுக்­கப்­படும். ஒரு தேசிய பட்­டி­ய­லுக்கு தீர்வு கண்­டுள்ளோம்.

அடுத்த தேசிய பட்­டியல் உறுப்­பினர் பிரச்­சி­னையும் விரைவில் தீர்த்து வைக்­கப்­பட இருக்­கின்­றது. தேசியப் பட்­டியல் சுழற்சி அடிப்­ப­டையில் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பதே எமது நிலைப்­பா­டாகும். கட்­சியின் வளர்ச்­சிக்­கு­ரிய முத­லீ­டாக அது பார்க்­கப்­பட வேண்டும். மாவட்டம், தொகுதி, ஊர் என்று பல­வி­த­மாக எதிர்­பார்ப்­புக்கள் உள்­ளன.

அதே நேரம், தலை­மைத்­துவம் வழங்­கிய வாக்­கு­று­தி­களும் உள்­ளன. இவற்றை எல்லாம் கருத்திற் கொண்­டுதான் முடிவு எடுக்­கப்­படும்.

அந்த அடிப்­ப­டையில் அம்­பாரை மாவட்­டத்­திற்கும் சுழற்சி அடிப்­ப­டையில் தேசிய பட்­டி­யலில் வாய்ப்பு வழங்­கப்­படும்.

கேள்வி: கட்­சியின் தேசிய மாநாடு முக்­கி­ய­மா­ன­தொன்று என்று சொல்­லு­கின்­றீர்கள். தேசிய மாநாட்டை புறக்­க­ணித்தால் அதனை ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்­கு­ரிய ஒரு விட­ய­மாக கரு­து­வீர்­களா?

புதில்: தேசிய மாநாட்­டிற்கு பங்­க­ளிப்புச் செய்­யாமல், இதனை வெற்­றி­ய­டையச் செய்ய விடாமல் ஏதா­வது நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மாக இருந்தால், அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக கட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவ­ற­மாட்­டாது.

கேள்வி: ஐ.நாவின் மனித உரிமைப் பேரவை ஆணை­யாளர் இலங்கை வந்த போது நீங்கள் வெளி­நாடு சென்­றமை அர­சாங்­கத்தின் அழுத்தம் கார­ண­மா­கவே என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது?

பதில்: வழக்­க­மாக முழங்­கா­லுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடு­வது போன்று மு.கா.வின் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைப்­பது சக­ஜ­மாக நடக்கும் விடயம்.

அவர் வந்த போது நான் வெளி­நாட்டில் இருந்­த­மையை வைத்தோ, அவரை மு.கா.வினர் சந்­திக்­க­வில்லை என்­ப­தனை வைத்தோ மு.கா முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களில் அச­மந்­த­மாக இருக்­கின்­ற­தென்று யாரும் நினைக்க வேண்­டி­ய­தில்லை. நாங்கள் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்றோம்.

LEAVE A REPLY