டி-20 உலக கிண்ணத்தில் சதம் அடித்த 7–வது வீரர் தமிம் இக்பால்

0
212

டி-20 உலக கிண்ண போட்டியில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச வீரர் தமிம் இக்பால் சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்தார்.

டி-20 உலக கிண்ணத்தில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஒட்டு மொத்தத்தில் 7–வது வீரர் ஆவார். இதற்கு முன்பு மெக்குல்லம் (123 ரன்), கிறிஸ்கெய்ல் (117 ரன்), ஹால்ஸ் (116 ரன்), அகமது ஷேசாத் (111 ரன்), ரெய்னா (101), ஜெயவர்த்தனே (100) ஆகியோர் உலக கிண்ணத்தில் சதம் அடித்து இருந்தனர்.

LEAVE A REPLY