பொலிவியா நாட்டில் சந்தைப் பகுதிக்குள் விமானம் பாய்ந்த விபத்தில் 7 பேர் பலி

0
87

தென் அமெரிக்கா கண்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பொலிவியா நாட்டின் பெனி மாகாணத்தில் உள்ள புறநகர் சந்தைப் பகுதிக்குள் சிறியரக பயணிகள் விமானம் பாய்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

வடகிழக்கு பொலிவியாவில் உள்ள புறநகர் பகுதியான சான்ட்டா அனா டெல் யாகுமா பகுதி வழியாக நேற்று பிற்பகல் பறந்த அந்த விமானம் திடீரென்று அங்குள்ள சந்தைமீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நான்குபேரும் சந்தைப்பகுதியில் இருந்த மக்களில் மூன்றுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த 15 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY