சிப்லி பாறுக்கினால் பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

0
182

எம்.ரீ. ஹைதர் அலி

கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து காத்தான்குடி இஸ்லாமிக் சென்ட்டர் (ஜாமியுத் தௌஹீத்) பள்ளிவாயலுக்கு 58,000.00 ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்மாக கையளிக்கும் வைபவம் அண்மையில் இஸ்லாமிக் சென்டர் (ஜாமியுத் தௌஹீத்) பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகசபை உறுப்பினர்கள் உட்பட அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதனையடுத்து பள்ளிவாயல் நிருவாகிகளுக்கும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்குமிடையில் பள்ளிவாயலின் ஏனைய குறைநிறைகளை பற்றிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த மாகாண சபை ஷிப்லி பாறூக்,

காத்தான்குடியிலுள்ள பெரிய ஜூம்மா பள்ளிகளுல் ஒன்றாக இப்பள்ளிவாயல் இருந்தபோதிலும் பல்வேறு குறைபாடுகளுடனையே காணப்படுகிறது. அந்த வகையில் இப்பள்ளிவாயலுக்கு தேவையாக இருந்த ஒலிபெருக்கி குறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக ஒலிபெருக்கி சாதனங்களை இன்று வழங்கியிருக்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இப்பள்ளிவாயலுக்கு தேவையான கதிரைகளையும், ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் வகுப்புகள் நடாத்தப்படுகின்ற போது அதற்கான அனுசரணையையும் மேலும் இப்பள்ளிவாயலுடைய அபிவிருத்திற்கு தன்னால் முடியுமான உதவிகளையும் வழங்குவேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY