சட்டவல்லுனர்களான அரசியல்வாதிகளை தமிழ் சமூகம் உருவாக்க வேண்டும்.

0
139

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சட்டவல்லுனர்களான அரசியல்வாதிகளை தமிழ் சமூகம் உருவாக்க வேண்டும் என மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன் தெரிவித்தார்.

சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற சாதனையாளர் பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களில் ஒரு சிலரே இன்னும் பிறந்த மண்ணை நேசித்து தேவைகளை நிறைவு செய்ய தங்களாலான முடிந்த உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்

தற்போதைய சூழலில் மாணவர்களை சட்டத்துறையிலே கற்பதற்கு ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எதிர்காலத்தில் எமது பிரதேசத்திலே சிறந்த சட்டவல்லுனர்களை உருவாக்க வேண்டும். சட்ட வல்லுனர்கள் உருவாகின்ற வேளையில்தான் தற்போது இருக்கின்ற அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும்.

அதேவேளை, சட்டம் பேசக்கூடிய சட்டத்தரணிகளான அரசியல்வாதிகளையும் தமிழ் சமூகம் உருவாக்க வேண்டும். முயன்றால் இது முடியாத காரியமல்ல. தமிழ் மக்கள் கடந்த காலங்களில் இன, மொழி ரீதியாக நசுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இனிவரும் காலங்களில் தலைநிமிர்ந்து நிற்கவேண்டுமானால் உயர்மட்டப் பதவிகளை வகிக்கின்ற அதேவேளை சட்டத்துறையிலும் முன்னேற வேண்டும்.

LEAVE A REPLY