பேஸ்புக், டுவிட்டருக்கு துருக்கி கோர்ட் தடை

0
153

துருக்கியின் தலைநகரான அங்காரா நகரில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்ததையடுத்து சமூகவலைத் தளங்களான பேஸ்புக், டுவிட்டருக்கு துருக்கி அரசு தடை விதித்துள்ளது.

துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில் குர்தீஸ் தீவிரவாதிகள் கடந்த பிப்ரவரி மாதம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 28 பேர் உயிர் இழந்தனர்.

இந்தநிலையில், அங்காராவில் நேற்றும் குர்தீஸ் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். பஸ் நிலையம், மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 34 பேர் உயிர் இழந்தனர். 125 பேர் படுகாயம் அடைந்தனர்.

சமீபத்தில் குர்தீஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது துருக்கி போர் விமானங்கள் சரமாரி குண்டுகள் வீசின. இதில் 50–க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.

இந்த தாக்குதல் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக திரித்து வெளியிடப்படுவதை தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூல வலைத்தளங்களுக்கு அங்காரா கோர்ட் தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY