கஃபாவில் நிழற்குடைகள் நிர்மாணம்

0
323

மக்கா பெரிய பள்ளிவாசலின் வடக்கு முற்றவெளியில் நிழல் ஏற்படுத்துவதற்காக உலகின் மிகப்பெரிய விரியும் குடைகளை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெரிய பள்ளிவாசலில் அடுத்த ஆறு மாதங்களில் உயர் தொழில்நுட்பம் கொண்ட எட்டு குடைகள் மற்றும் 54 சிறிய குடைகளும் அமைக்கப்படவுள்ளன.

ஜெர்மனியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஒவ்வொரு குடையிலும் இராட்ச கடிகாரம் ஒன்று, தொழுகை நேரத்தை வழிகாட்டும் திரைகள், குளிரூட்டிகள் மற்றும் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு குடையும் 45 மீற்றர்கள் உயரம் மற்றும் 16 தொன் பாரம் கொண்டதாக இருக்கும்.

இதன்மூலம் மக்கா பெரிய பள்ளிவாசலின் 2,400 சதுர மீற்றர்கள் பகுதியில் நிழல் ஏற்படுத்தப்படவுள்ளது. தவிர வடக்கு முற்றவெளியில் மேலும் 54 சிறிய குடைகள் நிறுவப்படுவதன் மூலம் ஒட்டுமொத்தமாக 19,200 சதுர மீற்றர் பகுதிக்கு நிழல் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு காலஞ்சென்ற சவூதி மன்னர் அப்துல்லாஹ் கடந்த 2014 இல் உத்தரவிட்டிருந்தார்.

இதேபோன்ற இராட்சத குடைகள் புனித மதீனா பள்ளி வாசலில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. இந்த குடைகள் கோடை காலத்தில் பகல் வேளைகளில் மலர் போன்று விரிந்து இரவு வேளையில் மூடிக்கொள்ளும். இவ்வாறு விரிந்து மூடிக்கொள்ளும் செயல் முறைக்கு வெறும் மூன்று நிமிடங்களே எடுத்துக் கொள்கின்றன.

இந்த குடைகளின் கூரைப்பகுதி சூடான வேளைகளில் யாத்திரிகர்களுக்கு குளிரை ஏற்படுத்தவும் குளிர் கால இரவுகளில் வேறாக வெப்பத்தை உணரச்செய்யும் வகையிலும் தயாரிக்கப்படவுள்ளன.

கஹ்பாவை சூழ அமைக்கப்பட்டிருக்கும் மக்கா பெரிய பள்ளிவாசலில் உலகெங்கிலுமிருந்து வரும் மில்லியன் கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் வெப்ப சோர்வு மற்றும் உடல் வறட்சியால் பாதிக்கப்படுவது பெரும் சுகாதார பிரச்சினையாக உள்ள நிலையில் பெரும்பாலான யாத்திரிகர்கள் தமது சொந்த குடைகளை பயன்படுத்துகின்றனர்.

(Thinakaran)

LEAVE A REPLY