ஜெர்மன்விங்ஸ் விமானி மனநல மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்

0
133

ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை துணை விமானி ஆண்ட்ரியாஸ் லூபிட்ஸ் விபத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிறது.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், குறித்த துணைவிமானி மருத்துவரால் மனநல மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக விமான விபத்து குறித்த அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் 9525 விமானம் விபத்துக்கு உள்ளாக்கப்பட்டதில், அதில் பயணித்த 150 பயணிகளும் விமானப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.

கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த துணை விமானி வேண்டுமென்றே விமானத்தை மலைப்பகுதியில் மோதச் செய்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

விமானிகள் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என விசாரணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்து இடம்பெற்றதற்கு சில மாதங்களுக்கு முன்பே லூபிட்ஸ் பல மருத்துவர்களை அணுகியுள்ளார்.

ஆனால் இது தொடர்பில் எவரும் விமான நிறுவனத்திற்கு அறிவித்திருக்கவில்லை என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY