ஓமானுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

0
152

உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஓமனுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றுள்ளது.

டி20 ஓவர் உலக கிண்ண தகுதி சுற்றில் 8 அணிகள் பங்கேற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றன.

இரண்டு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர் 10’ சுற்றுக்கு நுழையும். ‘பி’ பிரிவில் தகுதி சுற்று ஆட்டங்கள் நாக்பூரில் நேற்றுமுன்தினம் முடிவடைந்தன. ஆப்கானிஸ்தான் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று முதலிடத்தை பிடித்து ‘சூப்பர் 10’ சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் சூப்பர் சுற்றுக்காக வாய்ப்பை உறுதி செய்யும் போட்டியில் இன்று ஓமன் – வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் வித்தது. அந்த அணியில் தமிம் இக்பால் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 63 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும். சப்பீர் ரஹ்மான் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

பின்னர் மழை குறுக்கிட்டதால் ஓமன் அணிக்கு 12 ஓவர்களில் 120 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 12 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. வங்கதேசம் அணியில் சஷிக் அல் ஹாசன் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

டக்-வெர்த் விதியின் படி வங்கதேசம் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் அணி சூப்பர் 10 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

LEAVE A REPLY