ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் மீது தேவைப்பட்டால் பொருளாதார தடை: பிரான்ஸ் எச்சரிக்கை

0
133

ஏவுகணை சோதனை நடத்திய விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி உடனான சந்திப்பை அடுத்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜான் மார்க் அய்ராவுல்ட் இதனை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஈரான் ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்கா பேசவுள்ளது குறித்து கெர்ரி விவாதித்தார். ஈரான் வன்முறையை தேர்வு செய்தால், கூடுதல் பொருளாதார தடை விதிப்போம் என்று கெர்ரி கூறினார்.

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சுமார் 1,400 கிமீ தரை இலக்கைத் தாக்கவல்ல இரண்டு ஏவுகணைகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரான் சோதனை செய்தது. கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அடுத்தடுத்து மொத்தம் 3 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டது.

முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY