திருமலை வரோதயநகர் அம்மன் கோயில் மலைப்பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு

0
178

(அப்துல்லாஹ்)

திருகோணமலை, வரோதய நகரில் அமைந்துள்ள அம்மன் கோவில் மலைப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வரோதயநகரைச் சேர்ந்த முருகதாஸ் ஹரிதாஸ் (வயது 19) என்பவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை, பனை மட்டை வெட்டி வரப்போவதாக தன்னிடம் கூறி விட்டுச் சென்றவர் வீடு திரும்பாததையடுத்து, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்ததாக இளைஞனின் தந்தை முருகதாஸ் தெரிவித்தார்.

காணாமல்போனவரை வெள்ளிக்கிழமையிலிருந்து தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக உப்புவெளி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY