டி20 தகுதிச் சுற்று போட்டி: அயர்லாந்தை வீழ்த்தியது நெதர்லாந்து

0
102

இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கிண்ண  தகுதிச் சுற்று போட்டி ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெறும் கடைசி நாள் தகுதி சுற்று ஆட்டங்களின் முதல் ஆட்டத்தில் அயர்லாந்து– நெதர்லாந்து அணிகள் மோதின.

அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் ஏற்கனவே சூப்பர்-10 நுழைவதற்கான வாய்ப்பை இழந்து விட்டன. இதனால் அந்த அணிகள் மோதும் ஆட்டத்தில் எந்த பலனும் இல்லை. ஆனால் இரண்டு அணிகளும் ஆறுதல் வெற்றிப் பெறும் முயற்சியுடன் களமிறங்கியது.

டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். ஆனால் மழை காரணமாக போட்டி 6 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 6 ஓவரில் 59 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிப்பட்சமாக ஸ்டீபன் 27 ரன்கள் எடுத்தார்.

60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து 6 ஓவர் முடிவில் 47 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நெதர்லாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY