காரமுனை கிராமத்திற்கு செல்லும் வீதி பொதுமக்களால் சிரமதானம் செய்யப்பட்டது

0
161

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை கிராமத்திற்கு செல்லும் பழுதடைந்த வீதியினை திருத்தும் சிரமதான பணி ஒன்று இன்று (13) காரமுனை பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வீதியினால் காரமுனை, கிருமிச்சை, மதுரங்கேனி மற்றும் பாலையடி ஓடை ஆகிய பிரதேசங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள், பன்னைத் தொழிலாளர்கள், அக்கிராமங்களுக்கு அன்றாடம் தங்களின் தொழில்களை மேற்கொண்டு வரும் கூழித்தொழிலாளர்கள் என பலரால் இவ்வீதி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மழைக்காலங்களில் இவ்வீதியினால் கனரக வாகனங்கள் முறையற்ற விதத்தில் கூடுதலாக பயனிப்பதினாலும், மழைக்காலங்களில் வழிந்தோடும் நீரோட்டத்தினாலும் இவ்வீதி உடைப்பெடுப்பதால் இவ்வீதினால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு கஷ்டப்படுகின்றனர்.

இதனை கருத்திற்கொண்ட காரமுனை விவசாய அமைப்பு மற்றும் காரமுனை ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மழை காலங்களில் மழை நீர் வழிந்தோடக்கூடிய வகையில் வடிகான்கள் வீதியோரத்தில் வெட்டப்பட்டு வீதியில் உடைப்புக்குள்ளான பகுதிகளும் திருத்தியமைக்கப்பட்டு பொதுமக்கள் சிரமமின்றி பயனிக்கக்கூடிய முறையில் திருத்தம் செய்யப்பட்டன.

இச்சிரமதான பணியினை காரமுனை விவசாய அமைப்பின் செயலாளர் மன்சூர் காரமுனை ஜும்ஆ பள்ளிவாயில் தலைவர் அசனார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

(எம்.ரீ. ஹைதர் அலி)

IMG_3060 IMG_3066 IMG_3070

LEAVE A REPLY