மின் தடை விவகாரம்; விரைவில் தீர்வு வருகிறதாம்

0
203

இன்று நாடுபூராகவும் ஏற்பட்ட மின்தடை குறித்து தீவிரமாக ஆராய்ந்து, விரைவில் உரிய தீர்வை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

கேகாலை பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் மூன்றாவது முறையாக இவ்வாறாக மின்தடை ஏற்பட்டமையால் மக்கள் முகம்கொடுத்த சிரமங்களுக்கு வருந்துவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட முன்னர், மீண்டும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நாளை காலை இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு மற்றும் அந்த பிரிவினரைச் சந்தித்து இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

(அத தெரண)

LEAVE A REPLY