கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை; மின்சார சபை தலைவர் பதவி விலக முடிவு

0
214

கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் இன்று பிற்பகல் 02.30 அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டது. இந்தநிலையில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக, மின்சார சபையால் குறிப்பிடப்பட்டது.

மேலும், விரைவில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் மின் விநியோகம் சீராக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கொழும்பில் மீண்டும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.

பின்னிணைப்பு

மின்சாரசபையின் தலைவர் அனுர விஜேபால பதவி விலக தீர்மானித்துள்ளார்.

கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மூன்று தடவைகள் மிண்சாரம் தடைப்பட்டமைக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டு பதவி விலகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, சில இடங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியதும் உடனடியாக நீர் விநியோகத்தையும் வழமைபோல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(அத தெரண)

LEAVE A REPLY