(Flash) கொடுமைப்படுத்தப்பட்டு சூடு வைக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதி; காத்தான்குடியில் சம்பவம்

0
3240

காத்தான்குடி 5ஆம் குறிச்சியில் வசித்துவரும் 10 வயது சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டு சூடு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது தந்தையின் இரண்டாவது மணைவியினால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் கல்வி கற்றுவரும் சிறுமி இஸ்ரி (வயது 10), நேற்று (12) காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சிறுமி கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய அத்வைத கொள்கையை காத்தான்குடியில் பிரச்சாரம் செய்துவரும் றஊப் மௌலவி தரப்பின் முக்கிய உறுப்பினரான மஜீத் மௌலவி என்பவரே குறித்த சிறுமியின் தந்தையாவார். இவரது முதல் மணைவி மரணித்த பின்னர் இவர் இரண்டாவது திருமணம் செய்திருந்தார்.

மேலதிக விபரங்களுக்கு ஸாஜிலுடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY