புத்தளம் மக்களின் துன்பகரமான வாழ்வினை மாற்றியமைக்கவேண்டும்: ஹாபிஸ் நஸீர்

0
174

புத்தளம் மாவட்டத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான ஹாபீஸ் நசீர் அஹமத் நுரைச்சோலை, முசல்பிட்டி கிராமம், பள்ளிவாசல் துறை, கற்பிட்டி உள்ளிட்ட பிரதேச மக்களை சந்தித்து அம்மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.

இதன் போது கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இன்னும் நிரந்தர வீடு, குடிநீர், போக்குவரத்து பாதைகளின் சீரின்மை,தொழில் வசைதில்லாது படும் அவலநிலைகள் போன்ற பல பிரச்சினைகள் அப்பிரதேச மக்களினால் முதலமைச்சர் மத்தியில் முன்வைக்கப்பட்டன.

இதனை கேட்டறிந்த முதலமைச்சர் இம்மக்கள் படும் துன்பகரமான நிலையினை உடனடியாக மாற்றியமைக்கும் திட்டத்தினை செய்து கொடுக்க அம்மாகாண முதலமைச்சர் ,அமைச்சர்கள், மத்திய அரசாங்க அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறந்த தீர்வுத்திட்டத்தினை பெற்று கொடுக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார் .

மேலும் எதிர்வரும் 19 .03.2016 இடம் பெறவுள்ள முஸ்லீம் காங்கிரஸ் மாநாடு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது, இக்கலந்துரையாடலுக்கு வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பாறுக், மாகாணசபை உறுப்பினர் நியாஸ் மற்றும் அப்பிரதேச மத பெரியோர்கள் ஊர் பிரமுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY