பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கும் பாக்டீரியா: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

0
193

பிளாஸ்டிக்கினால் பெட் பாட்டில்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் விரைவில் அழியக்கூடிய தன்மை கொண்டது அல்ல. தெருக்களிலும், காலி இடங்களிலும் வீசப்படும் இந்த பொருட்கள் நீண்ட காலம் அழியாமல் இருக்கின்றன. இதன் மூலம் நச்சு வாயுக்கள் உருவாவதுடன் பல்வேறு விதமான சுற்றுச் சூழல் மாசுகளையும் ஏற்படுத்துகிறது.

பொதுவாக எல்லாவிதமான பொருட்களையும் பாக்டீரியாக்கள் தின்று அழித்து விடும். இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு தவிர்க்கப்படும்.ஆனால், பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் பாக்டீரியாக்கள் சாப்பிடுவது இல்லை. இதன் காரணமாக அவை அழியாமல் பூமியிலேயே கிடக்கின்றன. இந்த நிலையில் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் பொருட்களையும் தின்று அழிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக அங்குள்ள கொயட்டா பல்கலைக்கழகம், கெயோ பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அங்குள்ள பாட்டில் மறு சுழற்சி தொழிற்சாலையில் அவர்கள் ஆய்வு செய்த போது பிளாஸ்டிப் பொருட்களையும் அழிக்க கூடிய பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பாக்டீரியாக்களை அதிக அளவில் உற்பத்தி செய்து பிளாஸ்டிக் பொருட்களில் பரவவிட்டால் அவை அழிந்து விடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் முலம் பிளாஸ்டிக் பொருட்களை அழிப்பதற்கு புதிய தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY