மட்டக்களப்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக பா.உ. வியாழேந்திரன் ஜனாதிபதியால் நியமனம்

0
75

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பிலுள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியால் மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று- செங்கலடி, ஏறாவூர் நகர், பட்டிப்பளை, கிரான் ஆகிய 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக வியாழேந்திரன் பணியாற்றுவார்.

LEAVE A REPLY