ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் ஹக்கீம் வழங்கிய மற்றுமொரு வாக்குறுதி: NFGGயின் கணவு?

0
552

(சப்னி அஹமட்)

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கப்பட்டவாறு அவற்றை நான் நிவர்த்தி செய்வேன்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எதிர்வரும் 19ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை கிராமத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியாளர் சந்திப்பு இன்று (12) ஒலுவில் கிறீன் வில்லா ஹோட்டலில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார். அங்கு ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலலிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“தொகுதி ரீதியாக, மாவட்ட ரீதியாக, ஊர் ரீதியாக என்று பல இடங்களில் இந்த தேசியப்பட்டியல் எதிர்பார்ப்புக்கள் மக்களிடத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்த எதிப்பார்ப்பினை கட்சியின் தலைவராகிய நான் வாக்குறுத்தியளித்தவாறு அவர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வேன்.

தேசியப்பட்டியல் இரண்டில் ஒன்றுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலைமையில் மீகுதியாகவுள்ள ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும்.

கட்சியின் தலைமையினால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு அம்பாறை மாவட்டத்துக்கு நிச்சயமாக சுழற்சி முறையில் பாராளுமன்ற தேசியப்பட்டியல் பிரதிநித்துவத்தை வழங்குவேன்” என்றார்.

DSC_0934 copy DSC_0939 copy

LEAVE A REPLY