சேயா படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விடுதலையான மாணவன் மீண்டும் போதைப்பொருளுடன் கைது

0
170

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து 62 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் திவுலப்பிட்டிய, படல்கம, ஹுனுமுல்ல பிரசேங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரும் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு 15ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில், கொட்டதெனியாவ சிறுமி சேயா சந்தவமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தில் கைது செய்து பின் விடுதலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

-AD-

LEAVE A REPLY