காத்தான்குடியில் காணாமல்போன இரண்டுவயது சிறுமி பொலிசாரால் மீட்பு

0
378

​காத்தான்குடியில் நேற்று (11) மாலை காணாமல் போன இரண்டு வயது சிறுமி நான்கு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பாலமுனையில் வைத்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி அல் அமீன் வீதியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமியொருவர் நேற்றுமாலை 1மணியிலிருந்து காணாமல் போயிருந்தார்.

சிறுமி காணாமல் போனது தொடர்பில் பெற்றாரும் உறவினர்களும் தேடி வந்த நிலையில் காத்தான்குடிக்கு நான்கு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பாலமுனை பிரசேத்திலுள்ள ஜி.எஸ்.லேனில் வைத்து மாலை 4.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீதியில் சிறுமியொருவர் அழுது கொண்டு நின்றதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு சிறுமிக்கு ஆறுதல் கூறிய நிலையில் காத்தான்குடி பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர் ஸ்த்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தலைமையிலனா பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அத தெரண)

LEAVE A REPLY