கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடினால் வெஸ்ட் இண்டீசுக்குதான் உலககிண்ணம்

0
171

கிறிஸ்கெய்ல் அதிரடியாக ஆடினால் வெஸ்ட் இண்டீசுக்குதான் உலககிண்ணம். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வகையில் அவரது அதிரடி ஆட்டம் இருக்கும்.

உலக கிண்ணத்தில் அதிக சிக்சர்(49) அடித்த வீரராக அவர் உள்ளார். முதல் உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கெய்ல் 57 பந்தில் 117 ரன் எடுத்தார்.

இதுதான் 2–வது அதிகபட்ச ரன்னாகும்.கெய்ல் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 1406 ரன்(45 ஆட்டம்) எடுத்துள்ளார். இதில் 122 பவுண்டரிகளும் 87 சிக்சர்களும் அடங்கும். உலகக்கிண்ணத்தில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 2–வது இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலககிண்ணத்தில் அவர் ஜிம்பாப்வேக்கு எதிராக 147 பந்தில் 215 ரன் குவித்தார். இதனால் கெய்ல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

இதுதவிர வெய்ன் பிராவோ (991 ரன்), சாமுவேல்ஸ் (952 ரன்), ரஸ்சல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். கேப்டன் டாரன்சேமி (43 விக்கெட்), ஹோல்டர், டெய்லர் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

தரவரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் 2–வது முறையாக உலககிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. போல்லார்ட், டாரன் பிராவோ, சுனில் நரீன், லெண்டில், சிம்மன்ஸ் விலகியது அந்த அணிக்கு பாதிப்பே.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ள பிரிவில் அந்த அணி உள்ளது. அரை இறுதியில் நுழைவது சவாலானதே. தகுதி சுற்று அணியையும் சேர்த்து முன்னணி 2 அணிகளை வீழ்த்துவது கட்டாயம்.முதல் உலக கிண்ணத்தில் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறியது. தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசத்திடம் தோற்றது.

2–வது உலக கோப்பையில் அரை இறுதியில் இலங்கையிடம் தோற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. தனது நாட்டில் நடந்த உலக கோப்பையில் வெஸ்ட் இண்டிஸ் அணி ‘சூப்பர் 8’ சுற்றில் இந்தியாவை மட்டும் வென்றது. இலங்கையிடம் 57 ரன்னிலும், ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட்டிலும் தோற்றதால் அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

2012–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போட்டியில் அந்த அணி உலக கோப்பையை வென்று முத்திரை பதித்தது. இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தியது. கடந்த உலக கோப்பையில் அரை இறுதியில் இலங்கையிடம் தோற்று 2–வது இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

LEAVE A REPLY