எட்டு மணி­நேரம் வாக்­கு­மூ­ல­ம­ளித்த கோத்­த­பாய

0
176

ரக்னா லங்கா, எவன்கார்ட் ஆயுத களஞ்­சிய நிறு­வன ஊழல் குற்­றச்­சாட்டில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் எட்டு தட­வைகள் இடம்­பெற்ற தொடர்ச்­சி­யான விசா­ர­ணையின் பின்னர்முதல் தட­வை­யாக முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ நேற்று வெள்­ளிக்­கி­ழமை வாக்கு மூல­ம­ளித்தார். இதன்­போது, விசா­ரணை அதி­கா­ரி­களின் முன்­னி­லையில் கோத்­த­பாய ராஜபக் ஷ எட்டு மணி­நேரம் நின்­று­கொண்டு சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பாது­காப்பு அமைச்­சின்கீழ் செயற்­பட்ட ரக்னா லங்கா, எவன்கார்ட் ஆயுத களஞ்­சியம் மற்றும் அதில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிடம் தொடர்ச்­சி­யாக எட்டு தட­வைகள் விசா­ரணை நடத்­தப்­பட்டு வந்­தன. இந்­நி­லையில் நேற்றும் பண்­டா­ர­நா­யக ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­டப கட்­டடித் தொகு­தியில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

எனினும் நேற்று முதல் தட­வை­யாக கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் ரக்னா லங்கா ஆயுத நிறு­வனம் தொடர்­பிலும் எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்­சியம் குறித்தும் எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் வாக்­கு­மூலம் பெறப்­பட்­டது. நேற்று காலை 10 மணி­ய­ளவில் ஆணைக்­கு­ழுவில் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொள்ள ஆரம்­பித்­த­போ­திலும் சுமார் எட்டு மணி­நேரம் இந்த வாக்­கு­மூலம் வழங்கல் நீடித்­தி­ருந்­தது. இதன்­போது எட்டு மணித்­தி­யா­ல­யமும் நின்ற நிலை­யி­லேயே வாக்­கு­மூ­ல­ம­ளித்­த­தாக அவர் கூறி­யி­ருந்தார்.

வாக்­கு­மூலம் வழங்­கிய பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ கூறு­கையில்,

தொடர்ச்­சி­யாக எம்­மீது அர்த்­த­மற்ற விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. எமது ஆட்­சியில் பாது­காப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்த ரக்னா லங்கா ஆயுத நிறு­வ­னத்தின் செயற்­பா­டுகள் மற்றும் ஆயுத பரி­மாற்றம் மேற்­கொண்ட எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்­சியம் தொடர்பில் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி என்­மீது தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

இன்று என்­னிடம் வாக்­கு­மூலம் பெற­வேண்டும் என வர­வ­ழைத்து எட்டு மணி­நேரம் வாக்­கு­மூலம் பெற்­றனர். நின்­று­கொண்டே மிக­நீண்ட நேரம் வாக்­கு­மூலம் வழங்­கினேன். பின்னர் வாக்­கு­மூலம் பதி­வு­செய்ய நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த அதி­காரி ஒருவர் எனக்கு ஆசனம் ஒன்றை பெற்­றுக்­கொ­டுத்தார்.

எவ்­வாறு இருப்­பினும் என்னால் முடிந்த வரையில் அவர்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலையை இல­கு­ப­டுத்தி கொடுத்­துள்ளேன். ஏனைய காரியங்களை அரசாங்கம் மேற்கொள்ளும். எம்மை பழிவாங்கவும் எமது பயணத்தையும் மக்கள் எம்மீது வைத்துள்ள ஆதரவையும் முற்றாக அழித்து எம்மை முழுமையாக ஓரங்கட்டும் வகையில் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY