காத்தான்குடி அஷ்-ஷூஹதா பள்ளிவாயலுக்கு ஷிப்லி பாறூக் உதவி

0
180

கிழக்கு மாகாண சபையின் 2015ம் ஆண்டின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து காத்தான்குடி அஷ்-ஷூஹதா பள்ளிவாயலுக்கு 55,000.00 ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி சாதணங்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்மாக கையளிக்கும் வைபவம் அண்மையில் அஷ்-ஷுஹதா பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளிவாயல் தலைவர், நிர்வாகசபை உறுப்பினர்கள் உட்பட அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்,காத்தான்குடி நகரில் ஒருசில பள்ளிவாயல்களை தவிர எனைய பள்ளிவாயல்கள் பல்வேறு குறைபாடுகளுடன் தேவைகளுடையனவாக காணப்படுகின்றன. அவைகளை இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியோடு நிவர்த்தி செய்வதற்கு முயற்ச்சி செய்துகொண்டிருக்கின்றேன்.

அந்த வகையில் இப்பள்ளிவாயலுக்கு தேவையாக இருந்த ஒலிபெருக்கி குறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக ஒலிபெருக்கி சாதணங்களை இன்று வழங்கியிருக்கின்றேன் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இப்பள்ளிவாயலுடைய அபிவிருத்திற்கு தன்னால் முடியுமான உதவிகளை வழக்குவேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY