விண்வெளியில் 340 நாட்கள் தங்கி சாதனை படைத்த வீரர் நாசாவில் இருந்து ஓய்வு பெறுகிறார்

0
151

விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் இருந்தபடி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளுக்கு முன்னோடியான ஆராய்ச்சியில் ஈடுபட்டவாறு 340 நாட்கள் விண்வெளியை சுற்றிவந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்காட் கெல்லி மற்றும் ரஷிய விண்வெளி வீரரான மிக்காயில் கார்னியென்க்கோ ஆகியோர் கடந்த இரண்டாம் தேதி பூமிக்கு திரும்பினர்.

இந்த 340 நாள் விண்வெளிப் பயணமானது, செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை வசிக்க வைக்கும் தொலைநோக்கு திட்டத்தின் சோதனை முயற்சியாகவும், அமெரிக்காவின் நெடுநாளைய விண்வெளிப் பயணத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் சார்பில் இந்தப் பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்த விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி வரும் ஏப்ரல் முதல் தேதியன்று நாசாவில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக நேற்று அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY