கிழக்கு பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கான பதிவு பிற்போடப்பட்டுள்ளது

0
240

கிழக்கு பல்கலைக்கழக விவசாய மற்றும் விஞ்ஞான பீட (2014/2015) மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் குறிப்பிட்ட திகதியிலிருந்து பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 14 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2014/2015 கல்வி ஆண்டிற்காக பதிவு செய்யுமாறு கோரப்பட்ட விவசாய மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களின் பதிவே பின்னர் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த தினத்தில் (14) விஞ்ஞான மற்றும் விவசாய பீட மாணவர்கள் வருகை தர வேண்டாம் என்று பதிவாளர் கேட்டுள்ளார். அதே நேரம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலை கலாசார பீட மாணவர்கள் பதிவு நடவடிக்கைகள் திட்டமிட்டபடி எதிர்வரும் 13 ஆம் திகதியில் நடைபெறுமெனவும் கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY