முழு திறமையை வெளிப்படுத்தினால் கிண்ணம் எங்களுக்கு தான்: தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர்

0
115

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர்  பாப் டு பிளிஸ்சிஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த காலங்களில் இந்திய துணை கண்டத்தில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது கொஞ்சம் ஏமாற்றம் அளித்தாலும், இந்த 20 ஓவர் உலக கிண்ணத்தில்  இந்திய மண்ணில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளோம்.

எங்களது திறமைக்கு ஏற்ப முழு திறமையை வெளிப்படுத்தினால், கிண்ணத்தை  வெல்ல முடியும் என்பதை அறிவோம். கிண்ணத்தை  வெல்ல எல்லா அணிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்திய அணி விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது, அவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.

LEAVE A REPLY