(Poem) சரத் பொன்சேகா பாராளுமன்றில் பாட மறந்த பாடல்

0
217

சரத் பொன்சேகா பாராளுமன்றில் பாட மறந்த பாடல்

அம்மம்மா
எம்பியானாய் இன்று -அன்று
என்னை வதைத்தாய்
தாய் பிள்ளை தம்பி என்று ஒன்று சேர்ந்து
உன் பெமிலி போட்ட ஆட்டம்
கொஞ்சம் அல்லவோ

(அம்மம்மா)

“ஜெயிலில் வைத்து வதைத்து என்னை
சாவடிக்கக் காத்திருந்த
நன்றி அற்ற நாய்கள் இருந்த ஆட்சி.

இதில் வென்றெடுத்த யுத்த வெற்றி
வந்த வழி நினைவுமின்றி
தொல்லைகளும் தொடர்ந்து தந்தார் பாடு”

சால்வை நாடகத்தில் அண்ணன் தம்பிகளின் உள்ளம் கண்டேனே.
கள்ள ஊழல் செய்யும் அந்தத் தம்பிகளை நானும் கண்டேனே
அந்த நாடகத்தை….இன்று நான் சொல்லவா…
அந்த நாடகத்தை…. இன்று நான் சொல்லவா
அன்று நான் கண்ட வேஷங்கள் கொஞ்சமல்லவே
நான் இது போன்று பேசுவதை பொறுக்குதில்லையோ

(அம்மம்மா)

“தாஜுதீன் என்னும் இளைய கன்று
கார் விபத்தில் இறந்ததென்று
உன்னுடைய நாடகத்தில் காட்சி

அவனைக் கொண்டவனை கொமாண்டராக்கி லம்போகினி காரினிலே
ரேஷ் ஓட வைத்திருந்த ஆட்சி”

கண்ணில் நீர் பெருக அனோமா நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட பலம் தம்பி கோத்தாவை ஆடச் செய்ததுவே.
அது மோசமன்றோ… இன்னும் வேஷம் ஏனோ….
அது மோசமன்றோ… இன்னும் வேஷம் ஏனோ…. நீ ராஜாதி ராஜாவாக இருந்த கதை முடிந்து
வெறும் கூஜாவை ஆனாய் உந்தன் ஆட்டத்தால்.

-மொஹமட் நிஷவ்ஸ்-

LEAVE A REPLY