கிரிக்கெட்டே வேண்டாம்.. தற்கொலை செய்து கொள்ள நினைத்த சுரேஷ் ரெய்னா!

0
438

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா, தற்போது டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தில் லக்னோவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில் தான் சந்தித்த பிரச்சனைகளை பற்றி சுரேஷ் ரெய்னா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “நான் லக்னோவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில் தங்கி இருக்கையில் மிகவும் சிரமமாக இருந்தது. அங்கு என்னை பலரும் தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தனர்.

இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன்.

ஒரு முறை என்னையும், என் நண்பனையும் ஹாக்கி ஸ்டிக்கால் அடித்தனர். அந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த என் நண்பன் கோமா நிலைக்கே சென்றுவிட்டான்.

இதனால் பயந்து போன நான் இந்த விடுதிடே வேண்டாம் என்று ஒரே ஆண்டில் வீட்டிற்கு ஓடிவிட்டேன்.

இதன் பிறகு என் சகோதரரின் அறிவுரைபடி 2 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாட்டு வீரர்கள் விடுதிக்கு சென்றேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY