பாகிஸ்தான் அணி இன்று இந்தியா செல்கிறது

0
163

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் ‘பி’ பிரிவில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளும் மோதும் போட்டி வருகிற 19–ந் தேதி தர்மசாலாவில் நடக்கும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டது.

ஆனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் நடத்த இருந்த போட்டி தொடர் ரத்ததானதால் உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து ஆலோசிப்பதாக பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது.

அதன்பின் பாகிஸ்தான் அணி இந்தியா செல்ல அந்நாட்டு அனுமதி வழங்கியது.இந்த நிலையில் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் மோதும் தர்மசாலா போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று அம்மாநில அரசு திடீரென அறிவித்தது. இதனால் புதிய சிக்கல் உருவானது.

பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய இந்தியா வந்த பாகிஸ்தான் குழு அதிருப்தி தெரிவித்தது.இதனால் தர்மசாலா போட்டி கொல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எழுத்து பூர்வமாக இந்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.அதன்பின் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு புறப்படும் என்று பாகிஸ்தான் திடீர் நிபந்தனை விதித்தது. இதனால் இந்த விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இன்று அதிகாலை 3.20 மணிக்கு லாகூரில் இருந்து துபாய் புறப்பட்டு செல்கிறது. அங்கிருந்து பாகிஸ்தான் அணி கொல்கத்தா வந்தடையும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

கொல்கத்தாவில் நாளை நடக்கும் பெங்கால் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு குறித்து இந்திய அரசு எழுத்து பூர்வமாக உறுதிமொழி அளிக்காவிட்டால் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் அணி நாடு திரும்பும் என்று அந்நாட்டு அரசு வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY