அயர்லாந்து வங்காளதேசத்துடன் இன்று மோதல்

0
156

6–வது 20 ஓவர் உலக கிண்ண போட்டியில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் குரூப் ‘ஏ’ பிரிவில் வங்காள தேசம், ஓமன், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப் ‘பி’ பிரிவில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, ஆங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி முதன்மை சுற்றுக்கு முன்னேறும்.இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. தர்மசாலாவில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் போட்டியில் ஓமன்–நெதர்லாந்து (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன.ஓமன் அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. 2–வது ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர் கொண்டது.

இதில் வெற்றி பெறும் முனைப்பில் அந்த அணி உள்ளது. நெதர்லாந்து அணி வங்காளதேசத்திடம் போராடி தோற்றது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் போட்டியில் வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் அந்த அணி கடுமையாக போராடும்.

இரவு 7 மணிக்கு ஆட்டத்தில் வங்காளதேசம்–அயர்லாந்து அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. வங்காளதேசம் அணி 2–வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

அந்த அணி முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது.ஆசிய போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் ஆகிய முன்னணி அணிகளை வீழ்த்தி உள்ளதால் நம்பிக்கையுடன் இருக்கிறது.அயர்லாந்து அணி ஓமனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் வெற்றி பெற வேண்டி நெருக்கடியில் இருக்கிறது.

வங்காளதேசத்தை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அந்த அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.

இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் அயர்லாந்துக்கு சிக்கல் தான்.நேற்று ‘பி பிரிவில்’ நடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 11 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

ஏற்கனவே அந்த அணி ஆங்காங்கை தோற்கடித்தது. 2 வெற்றி பெற்றதால் ஜிம்பாப்வே அணி வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது. ஸ்காட்லாந்து 2 ஆட்டத்தில் தோற்றதால் வெளியேற்றப்பட்டது.

LEAVE A REPLY