பந்து வீச்சு சர்ச்சையில் வங்காளதேச பந்து வீச்சாளர்கள்

0
170

உலக கிண்ண  கிரிக்கெட்டில் வங்காளதேச அணி நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது. இந்த ஆட்டத்தின் போது வங்காளதேசத்தின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது, சுழற்பந்து வீச்சாளர் அராபத் சன்னி ஆகியோரின் பந்து வீச்சு, விதிமுறைக்கு புறம்பாக சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததாக ஆடுகள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வங்காளதேச அணி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் தங்களது பந்து வீச்சை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள பந்து வீச்சு பரிசோதனை மையத்தில் அவர்களது பந்து வீச்சு சோதனைக்குட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த தேதியில் அவர்கள் வருவார்கள் என்பதை உறுதிப்படுத்தும்படி வங்காளதேச அணி நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதுவரை அவர்கள் தொடர்ந்து பந்து வீசலாம்.

LEAVE A REPLY