தீ பற்றிய வேனில் இருந்து 5 சடலங்கள் மீட்பு

0
123

தங்கொட்டுவ, புத்கம்பொல பிரதேசத்தில் உள்ளக வீதி ஒன்றில் துருப்பிடித்த நிலையில் இருந்த பழைய வேன் ஒன்றில் இருந்து சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தங்கொட்டுவ பொலிஸ் அதிகாரிகளினால் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY