ரசிகர்கள் ஆதரவு: ஷரபோவா நெகிழ்ச்சி

0
121

ஊக்கமருந்து பயன்படுத்திய சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ரஷிய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவாவுக்கு 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அது குறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் பக்கபலமாக இருப்பது ஷரபோவாவை நெகிழ வைத்துள்ளது.

‘‘நேற்று முன்தினம் காலையில் எனது இ-மெயிலை திறந்து பார்த்த போது, ரசிகர்கள் அனுப்பிய தகவல்களால் நிரம்பி வழிந்தது. அந்த ‘மெயில்’களில் ரசிகர்கள் தங்களது ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்து இருந்தனர். ரசிகர்களின் அன்பும், கனிவான வார்த்தைகளும் என் முகத்தில் மீண்டும் சிரிப்பை கொண்டு வருகிறது. எனது ரசிகர்களை நினைத்து மிகுந்த பெருமிதம் அடைகிறேன். அவர்களுக்கு எனது நன்றி. மீண்டும் டென்னிஸ் விளையாடுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்று ஷரபோவா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஊக்கமருந்து பட்டியலை கவனிக்காமல் அலட்சிய போக்குடன் செயல்பட்ட ஷரபோவா தண்டிக்கப்படுவதற்கு தகுதியானவர் என்று முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY