டி20 போட்டியில் 277 ஓட்டங்கள்! இலங்கை வீரரின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர்

0
317

பாகிஸ்தான் வீரர் ஒருவர் டி20 போட்டியில் 277 ஓட்டங்கள் குவித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

பாகிஸ்தானில் நடந்த கிளப் போட்டி ஒன்றில் அகமது மீர் என்ற வீரர் 76 பந்தில் 277 ஓட்டங்கள் விளாசியுள்ளார். இதில் 26 சிக்சர்கள், 24 பவுண்டரிகளும் அடங்கும்.

ஆனால் இவருக்கு முன்னரே கடந்த 2007ம் ஆண்டு இலங்கை வீரர் தனுக பத்திரண முதல் தர டி20 போட்டியில் 72 பந்திலே 277 ஓட்டங்கள் குவித்திருந்தார். தற்போது இவரது சாதனையை அகமது மீர் சமன் செய்துள்ளார்.

முதல் தரப் போட்டிகளில் எளிதாக இமாலய ஓட்டங்களை வீரர்கள் எளிதில் எடுப்பது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் பிரானாவ் தனவாடே பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 1009 ஓட்டங்களை குவித்து உலகசாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY