(Poem) குற்றங்கள்

0
127

குற்றங்கள்

சிறகே இல்லாத கழுகு ஒன்று-இங்கு
பேஷ்புக்கில் திரிகிறது.
தடுப்பே இல்லாத பாவங்களால் -நாடு
தடம் மாறிச் செல்கிறது.
உதிர்ந்த இறகுடன்
இருக்கும் கழுகிற்காய்
உருகிடும் நெஞ்சங்களே.
இதிலும் பெரிதாக
கோடிக் குற்றங்கள்
நாளும் நடக்கிறதே.

பேசத் தெரியாத பிள்ளைக்கு
மோசம் சிலர் செய்கிறார்.
பாசம் பல தந்த அன்னையை
பழித்து சிலர் வாழ்கிறார்
அடி
கூடப் பிறந்தவனை
கூடி வாழ்ந்தவனை
கொலை செய்து சிலர் வாழ்கிறார்.
கோடி சேர்த்திடவும்
மாடி கட்டிடவும்
மனச்சாட்சி விலை பேசுறார்.
கட்டிய மனைவியை
விட்டுட்டு வேறொரு
பெண்ணை தேடுவதேன்?
பட்டமும் பதவியும்
பெற்றதன் பின்னாலே
பழையதை மறப்பதென்ன?

கோஷம் பல போட்டு தேர்தலில்
ஆட்சி சிலர் பிடிக்கிறார்.
ஆட்சி வந்தபின் ஊழலால்
சொத்தை அவர் சேர்க்கிறார்.
அடி
ஏழை எளியவரின்
போலி பெயர் சொல்லி
ஏமாற்றும் உலகமடி.
தூளை விற்று இங்கு
தோழன் வழி கெடுத்து
நாளும் வாழ்வாரடி.
எத்தனை பாவங்கள்
செய்தார் என்பதை
இறைவன் அறிவானடி
அத்தனை பாவமும்
அவர்களை ஒரு நாள்
அணுவாய்க் கொல்லுமடி.

-MOHAMED NIZOUS

LEAVE A REPLY