வெளிநாடு செல்கின்ற பெண் பிள்ளைகளை தடுப்பதற்காக காத்தான்குடியில் ஆடை தொழிற்சாலையினை நிறுவியுள்ள சஹாப்தீன்

0
921

அஹமட் இர்ஷாட்

1990 ஆண்டு காலப்பகுதியில் யுத்த சூழ் நிலைகளினால் பாதிக்கப்பட்டு பல கஸ்டங்களுக்கு மத்தியில் சவுதி அரேபியாவில் உள்ள கட்டுமான கம்பனிக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தார் மட்டக்களப்பு காத்தான்குடியினை சேர்ந்த சஹாப்தீன்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் சஹாப்தீன் கொழும்பினை சேர்ந்த நண்பருடன் தனது காரிலே பயணித்து கொண்டிருந்த வேலையில் அவருடைய காருக்கு முன்னால் சில நம் நாட்டு பெண்மனிகள் பொலிசாரினால் துரத்தப்பட்டு பல அசெளகரியங்களுக்கு மத்தியில் வீதியில் அல்லோலப்பட்டு கொண்டிருந்த நிலையில் கொழும்பினை சேர்ந்த சஹாப்தீனுடைய நண்பர் குறித்த அப்பெண்மனிகள் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில் தனது சொந்த மாகாண பெண்மனிகள் வெளி நாடுகளுக்கு வேலை வாய்பிற்காக சென்று அங்கு எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்க தொடங்கிய சஹாப்தீன் இறுதியில் நாம் ஏன் இவர்களுக்காக நம் நாட்டிலேயே வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க முடியாது என்ற தூர நோக்கு சமூக சிந்தனையின் பலனாக காதான்குடியிலே பெண் பிள்ளைகளுக்காக முற்றிலும் இலவசமான முறையில் தனது சொந்த நிதியினை செலவு செய்து தையல் பயிற்சி நிலையம் ஒன்றினை ஆரம்பித்தார்.

காலப்போக்கிலே தையல் பயிற்சியினை முடித்து வெளியேறிய பெண்பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக்களை தேடிக்கொள்வது கடிணமான விடயமாக காணப்பட்டதனால் மீண்டும் சிந்திக்க தொடங்கிய சஹாப்தீன் ஆண்களுக்கான பெனியன்களை தயாரிக்கும் ஆடை தொழிற்சாலையினை குறித்த காத்தான்குடி பிரதேசத்தில் நிறுவி தையல் பயிற்சி நெறியினை முடித்து வேலையில்லாமல் வீட்டிலிருக்கும் பெண் பிள்ளைகளுக்கு தொழிவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தார்.

மேலதிக விபரங்கள் கீழுள்ள வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY