ஹிஜாப் தடைக்கு எகிப்து பாராளுமன்றத்தில் சட்டமூலம்

0
249

பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதை தடை செய்யும் சட்டமூலம் ஒன்று எகிப்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வரவுள்ளது. இதில் பெண்கள் பொது இடங்களில் மற்றும் அரச நிறுவனங்களில் முகத்திரை அணிவதை தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தலைநகர் கெய்ரோவில் இருக்கும் பிரதான பல்கலைக்கழத்தில் விரிவுரையாளர்கள் முகத்திரை அணிய கடந்த ஒக்டோபரில் தடை விதிக்கப்பட்டது. முகத்தை மறைக்கும் ஆடை இஸ்லாமிய மரபு கொண்டதல்ல என்றும் அதனை அல் குர்ஆன் கோரவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டவியல்துறை விரிவுரையாளருமான கலாநிதி அம்னா நுஸைர் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி நுஸைர் அல் அஸ்ஹர் பல்கலைக்கழத்தின் முன்னாள் பீடாதிபதி என்பதோடு, எகிப்தின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான உச்ச கவுன்ஸிலின் உறுப்பினருமாவார். நிகாப் என்று அழைக்கப்படும் இந்த முகத்திரை யூதர்களின் மரபு கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

தலை முடியை மறைக்கும் வகையான சாதாரண ஆடையையே குர்ஆன் குறிப்பிடுகிறது, அது பெண்களின் முகத்தை மறைக்க கோரவில்லை என்றும் கலாநிதி நுஸைர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எகிப்தில் 2013 ஆம் ஆண்டு இஸ்லாமியவாத ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் அங்கு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.

(Thinakaran)

LEAVE A REPLY