வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா அபாரா வெற்றி

0
143

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக சூப்பர்–10 சுற்றில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு வசதியாக பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நேற்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் விளையாடி வருகின்றன. காயத்தால் ஒதுங்கி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம் பெற்றுள்ளார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 185 ரன்கள் குவித்து. அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 98 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் 31 ரன்களும், தவான் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சுலைமான் பென்னும், ஜெரோம் டெய்லரும் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள். 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கெயிலும் , ஜார்லசும் களமிறங்கினார்கள். கெயில் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராவோ 13 ரன்களும், ரசூல் 19 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்திய தரப்பில் சமி, ஜடேஜா மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

LEAVE A REPLY