உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டி: ஹாங்காங்கை எளிதாக விழ்த்தியது ஆப்கானிஸ்தான்

0
172

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நாக்பூர், தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற 2–வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்– ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. முதல் ஆட்டத்தில் வென்ற நம்பிக்கையுடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியுள்ளது. அந்த அணி சமீபத்தில் நடந்த ஆசியகிண்ண தகுதி சுற்றில் ஹாங்காங்கை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி 2–வது வெற்றி ஆர்வத்துடன் இருக்கிறது.

ஹாங்காங் அணி இந்த ஆட்டத்தில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவோம் என்ற நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது ஹாங்காங். தொடக்க ஆட்டகாரர் ரியான் காம்ப்பெல் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அன்ஷூமன் ரத் 28 ரன்கள் எடுத்தார். முகமது நபி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரரான முகமது ஷெசாத் 41 ரன்களும், நூர் அலி 35 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 119 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

LEAVE A REPLY