அறுவை சிகிச்சையை முடித்து கொண்டு தலாய்லாமா விரைவில் தர்மசாலா திரும்புகிறார்: திபெத்திய பிரதமர் தகவல்

0
177

புத்தமத தலைவர் தலாய்லாமா அறுவை சிகிச்சை முடித்து கொண்டு விரைவில் தர்மசாலா திரும்ப உள்ளதாக திபெத்திய பிரதமர் லோப்சாங் சங்கே கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கில் அவர் மூட்டு வலிக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் தர்மசாலாவிற்கு விரைவில் திரும்ப உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமாவிற்கு 80 வயதாவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY