டி20 உலகக்கிண்ண தகுதிச்சுற்று: தமிம் இக்மால் அதிரடியால் நெதர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

0
155

உலகக்கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று தரம்சாலாவில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன் படி முதலில் களமிறங்கிற வங்கதேச அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் அதிரடியாக ஆடி 58 பந்துகளில் 83 ஓட்டங்கள் குவித்தார். சர்க்காரும், ரகுமானும் தலா 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்கள் எடுத்து.

இதன் பின்னர் 154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. அந்த அணி வீரர்களால் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க முடியவில்லை.

தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீபன் மற்றும் அணித்தலைவர் பீட்டர் போரன் ஆகியோர் மட்டும் தலா 29 ஓட்டங்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.

இதனால் 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து 7 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வங்கதேச அணி தரப்பில் அல் அமின் மற்றும் அல் ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள். ஆட்டநாயகனாக தமீம் இக்பால் தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஓமன் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

முதலில் ஆடிய அயர்லாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஓமன் அணி 19.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY