அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு: 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி

0
141

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சி நடந்த பார்ட்டி ஹாலில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள வில்கின்ஸ்பர்க் நகரில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும், ஒரு பெண்மணி மருத்துவமனையில் இறந்ததாகவும், மேலும் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார்.

இரண்டு மர்ம நபர்கள் வெவ்வேறு ஆயுதங்களை கொண்டு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடைபெறும் சம்பவங்கள் அமெரிக்காவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்காக துப்பாக்கி விற்பனை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

(MM)

LEAVE A REPLY