இந்தியா – பாகிஸ்தான் போட்டி கல்கத்தாவுக்கு இடமாற்றம்!

0
127

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை தர்மசாலாவில் நடைபெறவிருந்த போட்டிகள் தற்போது கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கிண்ணப் போட்டி தர்மசாலாவில் எதிர்வரும் 19 ஆம் திகதி அட்டவணைப்படுத்தப்பட்டாலும் அங்கு சரியான பாதுகாப்பு ஒழுங்குகள் இல்லை என்பதால் இது தொடர்பில் நீடித்து வந்த சிக்கல் நிலை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

இப்போது அதே தினத்தில் மாற்றமின்றி கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடாத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்துள்ள மூவர் அடங்கிய குழுவும், பாகிஸ்தான் அணிக்கு நல்ல பாதுகாப்பு தர்மசாலா மைதானத்தில் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நிலையிலேயே போட்டி மைதானம் மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்களைப் பெற்றிருக்கும் மொத்தம் 16 அணிகள் பங்கெடுக்கும் உலக 20 க்கு 20 போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளன. இப்போது ஆரம்ப சுற்றுப் போட்டிகளும், 15 ஆம் திகதி முதல் முக்கிய 10 அணிகள் பங்கெடுக்கும் சூப்பர் 10 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

மேலும் இப்போட்டிக்கான அனுமதிச் சீட்டுக்கள் ஏற்கனவே விற்பனையாகி முடிந்துள்ளன. எனவே பார்வையாளர்களின் நன்மை கருதி இந்த விற்பனைச் சீட்டுக்கள் கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு மாற்றம் செய்து தரப்படும் என்றும், அவ்வாறு இல்லையெனில் வாடிக்கையாளர்களின் பணம் மீளச் செலுத்தப்படும் என்றும் ராகேஷ் ராவோ த ஹிண்டு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY